Our Feeds


Sunday, April 23, 2023

News Editor

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு எச்சரிக்கை

கடும் வெப்பம் காரணமாக கர்ப்பிணித் தாய்மார்கள் பிற்பகல் வேளையில் வெயிலில் படாமல் வீட்டில் நேரத்தைக் கழிப்பது அவசியம் என கொழும்பு காசல் வைத்தியசாலையின் மகப்பேறு வைத்திய நிபுணர் சனத் லனரோல் தெரிவித்தார்.


கர்ப்பிணித் தாய் ஒருவர் இந்த வெப்பமான சூழலில் மூன்று முதல் நான்கு லீற்றர் தண்ணீர் அருந்துவது அவசியம் எனவும், இல்லையெனில் நீரழிவு ஏற்பட்டு பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இருப்பினும், மிகவும் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தக்கூடாது என்றும் லனாரோல் கூறினார்.


அதிக வெப்பம் காரணமாக பருத்தி ஆடைகள் அல்லது தளர்வான ஆடைகளை அணிவதில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறிய நிபுணர் மருத்துவர், உடல் வெப்பநிலை 39.2 டிகிரி சென்டிகிரேடுக்கு மேல் அதிகரித்தால் வெப்ப அதிர்ச்சி கூட வரலாம் என்றும் கூறினார்.


கடும் வெப்பத்துடன் ஏற்படக்கூடிய தாகம், சோர்வு, மயக்கம், போன்றவற்றை அலட்சியப்படுத்தினால் மயக்கமடைந்து உஷ்ண அதிர்ச்சிக்கு ஆளாக நேரிடும் எனவும் அவ்வாறான நிலையைத் தவிர்த்தாலே சுகப்பிரசவத்திற்கு உதவும் எனவும் சனத் லனாரோல் மேலும் சுட்டிக்காட்டினார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »