இந்த போரில் ரஷ்யாவின் பல பகுதிகள் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஷியா ஆகிய 4 பிராந்தியங்களை ரஷ்ய தன்னுடன் இணைத்து கொண்டது.
சட்டவிரோதமான செயல் என கூறி ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை உலக நாடுகள் நிராகரித்தன.
இந்த நிலையில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுஹான்ஸ்க் மற்றும் கெர்சன் பிராந்தியங்களுக்கு நேற்று ரஷ்ய ஜனாதிபதி புதின் திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ஹெலிகாப்டர் மூலம் கெர்சன் பிராந்தியத்துக்கு சென்ற புதின் அங்குள்ள இராணுவ தலைமையகத்துக்கு சென்று, மூத்த இராணுவ அதிகாரிகளை சந்தித்து களநிலவரம் குறித்து கேட்டறிந்துள்ளார்.
அதை தொடர்ந்து, லுஹான்ஸ்க் பிராந்தியம் சென்ற புதின் இராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.
இரண்டு இடங்களிலும், ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகையையொட்டி இராணுவ வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த புதின், அவர்களுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கியுள்ளார்.
