Our Feeds


Wednesday, April 19, 2023

SHAHNI RAMEES

11 வயது மாணவனின் உயிரைப் பறித்த வாகன விபத்து...!

 




ஹெட்டிபொல, மூனமல்தெனிய - கட்டுபொத்த

வீதியில் அங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இந்த விபத்து நேற்று (19) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கட்டுபொடயிலிருந்து மூனமல்தெனிய நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் சென்றுக்கொண்டிருநத பாடசாலை மாணவர் ஒருவர், பஸ்ஸிலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் சிறிய ரக லொறியில் மோதி விபத்துக்குள்ளானார்.




விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவர் குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.



வலவ்வத்தை அனுக்கன்ஹேன பிரதேசத்தில் 6ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 11 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.




விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »