கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் இன்றுடன் ஒரு வருடத்தை அடைந்துள்ளது.
இதையடுத்து குறித்த போராட்டத்தை நினைவுகூரும் வகையில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு இன்று காலை காலி முகத்திடலில் நடத்தப்பட்டது.
எனினும் குறித்த நிகழ்வுக்கு சுமார் 20 பேர் வரை மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.
முழு இலங்கையும் கொந்தளித்து வந்து காலி முகத்திடலில் போராட்டம் நடத்திய நிலையில், இன்று போராட்ட நிகழ்வுக்கு யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.