இஸ்ரேலை நோக்கி ஏவப்படுவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ரொக்கெட் லோஞ்சர் ஒன்றை தான் செயலிழக்கச் செய்தததாக லெபனான் இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.
லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்திய சில மணித்தியாலங்களின் பின்னர் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லெபனானிலிருந்து நேற்று இஸ்ரேலை நோக்கி ரொக்கெட்டுகள் ஏவப்பட்டதையடுத்து, இன்று காலை லெபனான் மற்றும் பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேல் காலை ஷெல் தாக்குதல்களை நடத்தியது.
ஹமாஸ் இயக்கத்தை இலக்குவைத்து இந்த பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
நேற்று லெபனானிலிருந்து 34 ரொக்கெட்கள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரொக்கெட்டுகள் பொருத்தப்பட்டு, இஸ்ரேலை நோக்கி ஏவப்படுவதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த பல்குழல் ரொக்கெட் லோஞ்சர் ஒன்றை தான் செயலிழக்கச் செய்தததாக லெபனான் இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய எல்லைக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் மேற்படி ரொக்கெட் லோஞ்சர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் லெபானன் இராணுவம் தெரிவித்துள்ளது. (Photos: AFP)