Our Feeds


Wednesday, April 12, 2023

SHAHNI RAMEES

ஹட்டனில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு...!

 

ஹட்டன் பொலிஸ் பிரிவில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



குறித்த மரணம் நேற்று (11) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



பிரவுன்ஸ் ஹோம்ஸ், புகையிரத நிலைய வீதி பகுதியில் உள்ள வீடொன்றின் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்ததை தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



புகையிரத நிலைய வீதியின் பிரவுன்ஸ் ஹவுஸில் வசிக்கும் 58 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »