Our Feeds


Saturday, April 1, 2023

Anonymous

இலங்கையுடன் தொடர்புடைய சிம்பாப்வே ராஜதந்திரி பதவி நீக்கம்!

 



ராஜதந்திர பதவியை பயன்படுத்தி தங்கம் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் சிம்பாப்வேயின் மிகவும் செல்வாக்கு மிக்க இராஜதந்திரிகளில் ஒருவரான யூபெர்ட் ஏஞ்சலின் இராஜதந்திர அந்தஸ்து பறிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


யூபெர்ட் ஏஞ்சல், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கான சிம்பாப்வேயின் தூதராக அந்த நாட்டின் ஜனாதிபதி மங்கக்வாவால் நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையிலேயே அவர் தங்கம் கடத்தியதாக அல் ஜசீரா அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தது.

எனினும் தம்மீதான குற்றச்சாட்டை யூபெர்ட் ஏஞ்சல் அண்மையில் மறுத்திருந்தார்.

இலங்கையின் மத போதகரான ஏஞ்சல் நபி ஜெரோம் பெர்னாண்டோவுடன் உறவைப் பேணி வந்த அவர் 2020 மற்றும் 2022 இல் இலங்கைக்கு வந்திருந்தார்.

இதன்போது அவர் இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும் சந்தித்தார்.

இதேவேளை அவர் சிறைக்கு செல்லக்கூடும் என்று சிம்பாப்வே  முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »