Our Feeds


Sunday, April 16, 2023

SHAHNI RAMEES

மீண்டும் பிரச்சார நடவடிக்கையை ஆரம்பித்த ஜப்பான் பிரதமர்...!

 

ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா புகை வெடிகுண்டு வெடித்த இடத்தில் இருந்து காயமின்றி வெளியேற்றப்பட்ட பின்னர் பிரச்சாரத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.



இந்த தாக்குதல் சம்பவம் நாட்டையும் நாட்டு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.



தென்மேற்கு ஜப்பானில் உள்ள வயகமா என்ற பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அந்நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா நேற்று (15) காலை உரையாற்றினார் .



அப்போது அவர் மீது ஒரு நபர் கையெறி குண்டு ஒன்றை வீசியுள்ளார்.



அதிக சத்தத்துடன் குண்டு வெடித்து புகை மூட்டம் சூழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



இந்த சம்பவத்தில் பிரதமர் புமியோ கிஷிடா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். குண்டு வெடித்த சமயத்தில் பிரதமரின் பாதுகாவலர்கள் அவரை சூழ்ந்து கொண்டு பத்திரமாக அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »