கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணையொன்றை தான் வெற்றிகரமாக சோதனையிட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் கபுஸ்டின் யார் சோதனைத் தளத்திலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
கஸகஸ்தானிலுள்ள சாறி-ஷாகன் பயிற்சி நிலையத்திலுள்ள போலி இலக்கு ஒன்றை ஏவுகணை தாக்கியதகாவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்யா அச்சுறுத்தப்பட்டால் தான் அணுவாயுதத்தை பயன்படுத்த முடியும் என உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப் பின்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரித்து வருகிறார்.
அணுவாயுதங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தவும் பரஸ்பரம் மற்றைய நாட்டின் அணுவாயுதங்களை சோதனையிடுவதற்காகவும் அமெரிக்கா, ரஷ்யா இடையே செய்துகொள்ளப்பட்டிருந்த உடன்படிக்கையிலிருந்து ரஷ்யா விலகுவதாக கடந்த பெப்ரவரி மாதம் ஜனாதிபதி புட்டின் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
