அஹுங்கல்ல, மித்தரமுல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் நேற்று (14) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டு சிறிய குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த நபர் சிகிச்சைக்காக பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும், அதில் பயணித்த இரண்டு சிறுவர்களும் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 29 வயதுடைய மித்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
