Our Feeds


Saturday, April 15, 2023

ShortNews

‘போர்டிங் பாஸ்’களை மாற்றி மோசடி செய்த இலங்கை மற்றும் ஜேர்மன் நாட்டவர்கள். - நடந்தது என்ன?



இரண்டு வெவ்வேறு நாடுகளுக்குச் செல்வதற்காக, விமானத்தின் இருக்கையை உறுதி செய்து வழங்கப்படும், ‘போர்டிங் பாஸ்’களை மாற்றிக் கொண்டதாகக் கூறப்படும் இரண்டு வெளிநாட்டினரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை மற்றும் ஜேர்மனியை சேர்ந்தவர்கள். மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி கடவுச்சீட்டில் பயணித்த இலங்கை பிரஜை மற்றும் ஜேர்மன் நாட்டவர் ஆகியோர் லண்டன் மற்றும் காத்மாண்டு செல்வதற்காக விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் தங்களுடைய போர்டிங் பாஸ்களை மாற்றிக்கொண்டனர்.

இலங்கைப் பிரஜையின் கடவுச்சீட்டில் உள்ள முத்திரை போலியானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டில் உள்ள புறப்படும் முத்திரை எண்ணும், போர்டிங் பாஸில் உள்ள முத்திரை எண்ணும் வித்தியாசமாக இருப்பதை விமான நிறுவன அதிகாரி கண்டறிந்தார்.

இதையடுத்து பொலிஸார் இருவர் மீதும் மோசடி, மோசடி மற்றும் குற்றச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த குற்றத்தில் மேலும் பலர் ஈடுபட்டுள்ளனரா என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »