தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு முதுகெலும்பில்லை என்பதற்காக அரச ஊழியர்களின் சம்பளத்தை பறிப்பது சரியா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
அரச ஊழியர்களுக்கு சம்பளம் பறிபோனது அவர்களின் தவறில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.அரசு அதிகாரிகள் விடுமுறை எடுத்து தேர்தலுக்கு வந்தார்கள். தேர்தலை நடத்த பணம் தருவதில்லை என அரசாங்கம் தீர்மானித்ததால் தேர்தல் காலதாமதமானது. அது அரசு ஊழியர்களின் தவறல்ல.
ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களை அரசாங்கம் புறக்கணித்துள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பல அரச உத்தியோகத்தர்களுக்கு இதுவரை சம்பளம் கிடைக்கவில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதனை அரசாங்கம் பாரதூரமான விடயமாக கருதி இவ்விடயத்தில் தலையிட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.