Our Feeds


Monday, April 17, 2023

News Editor

தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளான ஸ்ரீ லங்கன் விமானம் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக தகவல்


 300 இலங்கை பயணிகளுடன் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் தொழில்நுட்பக் கோளாறினால் பாதிக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் இன்று (17) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளது.


குறித்த விமானத்தின் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்வதற்காக ஸ்ரீலங்கன் விமான சேவையின் 6 பொறியியலாளர்கள் கடந்த 15ஆம் திகதி இரவு நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.


நேற்று, இந்த விமானம் மெல்பேர்னில் இருந்து இலங்கைக்கு வரவிருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பயணிகளை மெல்பேர்னைச் சுற்றியுள்ள ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.


எவ்வாறாயினும், இலங்கை அதிகாரிகள் தம்மை மெல்பேர்ன் விமான நிலையத்தில் 24 மணித்தியாலங்களுக்கு மேலாக தடுத்து வைத்ததாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »