Our Feeds


Thursday, April 13, 2023

SHAHNI RAMEES

ரஷ்யாவின் மத்திய வங்கி நிதிகளை முடக்க வேண்டும் : உக்ரைன் ஜனாதிபதி

 

உக்ரைனின் பாக்முத் நகரை கைப்பற்றி, ரஷ்ய கொடியும் சமீபத்தில் நாட்டப்பட்டது. போரில் ரஷ்ய தரப்பில் முன்னேற்றம் காணப்படுகின்றது. 



இந்த நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றில் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கிகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.



அதில், உலகம் முழுவதும் உள்ள ரஷ்யாவின் மத்திய வங்கியின் சொத்துகள், நிதிகளை முடக்க வேண்டும் என்றும் அவற்றை கொண்டு உக்ரைனை மறுகட்டமைப்பு செய்ய உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.



உக்ரைனில் ஏற்பட்டு உள்ள இழப்புகளை ஈடுகட்டுவதற்காக இந்த நடவடிக்கையை ரஷ்யாவுக்கு எதிராக எடுக்கும்படி அவர் கேட்டு கொண்டுள்ளார். 



ரஷ்யா தனது அராஜகத்திற்கான முழு விலையையும் உணர வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். 



தொடர்ந்து அவர் இது குறித்து தெரிவிக்கையில், ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள், ரஷ்யாவின் வெளிநாட்டில் உள்ள 6 ஆயிரம் கோடிக்கும் கூடுதலான அமெரிக்க டொலர் மதிப்பிலான சொத்துகளை முடக்கும் என அறிவித்தது.



ரஷ்ய நிறுவனங்களுக்கு எதிரான தடை நடவடிக்கைகளும் தொடர்ந்தன. ரஷ்ய ஜனாதிபதி புதினுடன் தொடர்புடைய பணக்காரர்களுக்கு எதிராகவும் தடை விதிக்கப்பட்டன. 



இதேபோன்று ரஷ்யாவின் மத்திய வங்கியும் முடக்கப்படுவது பற்றி தெளிவாக குறிப்பிட வேண்டும். உலக அளவில் அது அமைதி உருவாக்கும் ஒரு நடவடிக்கையாக அமையும் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »