Our Feeds


Friday, April 14, 2023

SHAHNI RAMEES

சஜித்தை பிரதமராக்க ஜனாதிபதி தயார்..- கூட்டு முயற்சியில் ஹக்கீம் – மனோ

 

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

பதவியை வழங்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனராம்.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சிறுபான்மை கட்சிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டதாம்.

அங்கு சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் தற்போதைய அரசாங்கத்திற்கு சிறுபான்மை கட்சிகள் என்ற ரீதியில் எந்த நேரத்திலும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், தனி நபர்களாகவோ அல்லது தனிப்பட்ட கட்சிகளாகவோ அல்லாமல், சஜித் பிரேமதாசவுடன் இணைந்து அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது நல்லது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு பதிலளித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயாராக இருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.


இது குறித்து ரவூப் ஹக்கீம் மற்றும் மனோ கணேசன் எம்.பி.க்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தெரிவித்துள்ளதாகவும் கிசு கிசுக்கப்படுகின்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »