அனுராதபுரம் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றுக்குள் நுழைந்த வெளியாட்கள் சிலர் பாடசாலை மாணவர்களை தாக்கிய சம்பவம் ஒன்றுநேற்று (11) பிற்பகல் பதிவாகியுள்ளது.
குறித்த பாடசாலையின் உயர்தர மாணவர்களுக்கு நேற்று இடம்பெற்ற மேலதிக வகுப்பின் போதே, குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரு மாணவர்கள் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் கொடூரமாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த இரண்டு மாணவர்களும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதல் சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
