Our Feeds


Wednesday, April 12, 2023

ShortNews

இலங்கையைச் சேர்ந்த தந்தையும், மகனும் அவுஸ்திரேலியாவில் உயிரிழப்பு



அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகனும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.


59 வயதுடைய நபரும் 21 வயதுடைய அவரது மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.



அவர்கள் மற்றொரு குழுவுடன் அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


அங்கு குளிப்பதற்குச் சென்ற தந்தை முதலில் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அவரைக் காப்பாற்ற மகளும் மகனும் முயற்சித்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


எவ்வாறாயினும், அவர்கள் மூவரும் நீரில் மூழ்கிய நிலையில், மகள் மாத்திரம் உயிர் பிழைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »