Our Feeds


Tuesday, April 18, 2023

News Editor

சிரியாவில் அமெரிக்க ஹெலிகொப்டர் தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பின் தலைவர் உயிரிழப்பு


 சிரியாவில் அமெரிக்க ஹெலிகொப்டர் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பின் முக்கியத் தலைவர் கொல்லப்பட்டுள்ளார்.


அந்நாட்டின் வடக்குப் பகுதியில் அதிகாலையில் ஐஎஸ் அமைப்பின் முக்கிய நபராகக் கருதப்படும் அப்த்-அல் ஹாடி மஹ்மூத் அல்-ஹாஜி அலி என்பவர் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து அமெரிக்கப் படையினர் குறிப்பிட்ட பகுதியில் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.


அல்-ஹாஜி அலி, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிடுவதற்குப் பொறுப்பான ஒரு செயல்பாட்டுத் தலைவர் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »