மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டினை நிராகரிப்பதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய போது அரசாங்க நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக குறித்த தனிப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அஜித் நிவார்ட் கப்ராலின் சட்டத்தரணிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகளை ஏற்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல இந்தத் தீர்மானத்தை வழங்கியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றஞ்சாட்டுவதற்கு போதுமான உண்மைகளை முன்வைக்க முறைப்பாட்டாளர் தவறிவிட்டடதாக குறிப்பிட்டார்.
இந்த தனிப்பட்ட முறைப்பாடு தென் மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோனினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.