இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயின் பாராளுமன்ற உறுப்புரிமைக்கு எதிராக அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிப்பதா, இல்லையா? என்பது தொடர்பிலான தீர்மானம் ஏப்ரல் 24ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று (06) உத்தரவிட்டார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ் டயானா கமகேவை கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.