Our Feeds


Monday, April 24, 2023

ShortTalk

டயானா விடயத்தில் உத்தரவு தேவையில்லை... CID அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு



குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றங்களுக்காக இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்வது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் உள்ளதால், அது தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க மாட்டாது என கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கின் முன்னதாக, முறைப்பாட்டாளர் ஓஷல ஹேரத் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்ததுடன், போதிய சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் டயானா கமகேவைக் கைது செய்ய முன்வராது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் டயானா கமகேவைக் கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு சட்டத்தரணிகள் முன்னர் நீதிமன்றில் கோரியிருந்தனர்.

இன்று தனது முடிவை அறிவித்த மாஜிஸ்திரேட், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் விசாரணை அதிகாரிகளுக்கு அதைக் கையாள்வதற்கான அதிகாரம் இருப்பதாகக் கூறினார்.

எனவே இது தொடர்பில் தமது நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பது தேவையற்றது என நீதவான் தெரிவித்துள்ளார்.

அதன்பின், வழக்கை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »