Our Feeds


Sunday, April 16, 2023

ShortNews

அரசியல், சமூக விவகாரங்களில் சமூகம் அதிக கவனம் செலுத்த வேண்டும் - கொழும்பில் “MLF” தலைமை அலுவலகம் திறப்பு நிகழ்வில் செயலாளர் கோரிக்கை



முஸ்லிம் இடதுசாரி முன்னணி கட்சியில் தலைமைக் காரியாலயம் கொழும்பில் திறந்து வைக்கப்பட்டது. 

கொழும்பு 12 இல் 44ம் இலக்க கட்டிட வளாகத்தில் முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் தலைமைக் காரியாலயம் கடந்த 05.04.2023 அன்று திறந்து வைக்கப்பட்டது. 


இப்தார் நிகழ்வுடன் நடத்தப்பட்ட குறித்த நிகழ்வில் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். 


நிகழ்வில் பேசிய “முஸ்லிம் இடதுசாரி முன்னணி”யின் பொதுச் செயலாளர் சகோதரர் பைசால் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளை காக்கவும், சுயநல அரசியலை இல்லாதொழிக்கவும் “முஸ்லிம் இடதுசாரி முன்னணி” தொடர்ந்து பாடுபடும் எனவும், அரசியல், சமூக விவகாரங்களில் முஸ்லிம் சமூகம் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »