Our Feeds


Saturday, April 29, 2023

News Editor

புறாக்களை திருடி,உணவாக தயாரித்து Tik Tok வெளியிட்ட மூவர் கைது


 உல்லாசமாக வளர்க்கப்பட்ட புறாக்களை திருடிச்சென்று அவற்றைக் கொன்று, பின்னர் உணவாக தயாரித்து இவற்றை TikTok வீடியோவாக வெளியிட்ட இளைஞர்கள் குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


சந்தேக நபர்கள் இது தொடர்பான காணொளியை வட்ஸ்அப் மூலம் புறாக்களின் உரிமையாளருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


இந்த சம்பவம் அளுத்கம தர்கா நகரில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் சந்தேக நபர்கள் மூவரை கைது செய்துள்ளனர்.


அளுத்கம பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


கடந்த 26ஆம் திகதி அளுத்கம தர்கா நகரம், இஸ்தாபுல்லா வீதி பகுதியில் புறாக்கள் இருந்த கூண்டை உடைத்து இந்தச் செயலை மேற்கொண்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் 18 மற்றும் 20 வயதுடைய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்கள் மூவரும் நாளை (30) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »