Our Feeds


Friday, April 14, 2023

SHAHNI RAMEES

#VIDEO: திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி...

 



இன்று (14) சித்திரைப் புத்தாண்டு நாளில் ஒரு குழுவினரை

ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.


தீயினால் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.


றாகம பிரதேசத்தில் வசிக்கும் குழுவினர் அகலவத்தை-நேகம் நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


முச்சக்கரவண்டியில் பயணித்த 4 பேர் கொண்ட குடும்பம் ஒன்று களுத்துறை கட்டுகுருந்த சந்தியில் திடீரென தீ பரவியுள்ளது.


இந்த தீ விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தீப்பற்றிய தருணத்தில் உடனடியாக அனைவரும் முச்சக்கரவண்டியில் இருந்து வெளியே குதித்து உயிரை பாதுகாத்துக் கொண்டதாக தெரியவருகிறது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »