பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி உட்பட்ட எதிர்க்கட்சியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கத் தயாராகி வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக அந்த எம்.பி.க்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் , நாளைய தினம் பாராளுமன்ற அமர்வுக்கு கட்டாயம் வருகை தருமாறு ஆளும் கட்சி பிரதம கொறடா அலுவலகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
வெளிநாட்டில் இருந்த இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் மற்றும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஏற்கனவே நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க பதவி நீக்கம் தொடர்பில் நாளை (24) பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளதுடன், அது தொடர்பான வாக்கெடுப்பு பிற்பகல் நடைபெறவுள்ளது.