‘சிசு செரிய’ பாடசாலை பஸ் சேவைக்கான செலவில் 70 வீதத்தை அரசாங்கமும், எஞ்சிய கட்டணத்தில் 30 வீதத்தை பெற்றோரிடமிருந்து அறவிடுவதற்கும் அரசாங்கத்திற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் காரணமாக சேவைக்கான செலவை அரசால் தாங்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.