செர்பியா நாட்டின் பெல்கிரேட் பகுதியில் உள்ள பாடசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் சிக்கி எட்டு குழந்தைகள் மற்றும் காவலர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவனை பொலிஸார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
14 வயது சிறுவன் தனது தந்தையின் துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செர்பியா தலைநகரில் உள்ள வர்ச்சர் பகுதியில் இயங்கி வரும் பாடசாலையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
எட்டு குழந்தைகள் உட்பட மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆறு பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.