Our Feeds


Wednesday, May 3, 2023

Anonymous

ரஷ்ய அதிபர் புடினை கொல்ல உக்ரேன் முயற்சி!! - ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு!

 



ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையான கிரெம்ளினை இலக்கு வைத்து பறந்த இரண்டு ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) வீழ்த்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.


இதன் மூலம் தங்களுடைய அதிபர் விளாதிமிர் புதினை கொல்ல யுக்ரேன் முயற்சித்ததாக கிரெம்ளின் குற்றம்சாட்டியிருக்கிறது.

இந்நிலையில், இந்த ட்ரோன் தாக்குதலுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று யுக்ரேன் தெரிவித்துள்ளது.

மின்னணு ரேடார் தளவாடத்தை பயன்படுத்தி இந்த இரண்டு ட்ரோன்களும் முடக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் நடந்தபோது அதிபர் புதின் கிரெம்ளினில் இல்லை என்று அவரது செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »