Our Feeds


Thursday, May 4, 2023

ShortTalk

மக்கள் பலத்தை காட்டவேண்டிய நேரத்தில் காட்டுவோம். இது அதற்குறிய நேரமல்ல! - ஐக்கிய தேசிய கட்சி



(எம்.ஆர்.எம்.வசீம்)


மக்கள் பலம் மற்றும் அரசியல் பலத்தை காட்டவேண்டிய நேரம் இதுவல்ல. நாடு எதிர்கொண்டுள்ள சவாலை எவ்வாறு வெற்றிகொள்ளவதென்ற வேலைத்திட்டத்தை அமைத்துக்கொண்டு முன்னுக்கு செல்வதே எமது நோக்கம். அதனாலே ஐக்கிய தேசிய கட்சியின் மேதின கூட்டத்தை எளிமையான முறையில் நடதினோம் என ஐக்கிய தேசிய கட்சி நிறைவேற்று குழு உறுப்பினர் சட்டத்தரணி விதானபத்திரண தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (02) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சி மேதின கூட்டத்தை சுகததாச உள்ளக அரங்கில் நடத்தியமை தொடர்பாக பலரும் விமர்சித்து வருகின்றனர். மேதின கூட்டத்தை வழமையான மேதின கூட்டங்களைப்போல் பிரமாண்டமாக நடத்துவதற்கு முடியும். நாங்கள் செய்தும் காட்டி இருக்கிறோம். 

ஆனால் நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நிலையில், மேதின கூட்டத்துக்கு ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை நாட்டின் பல பிரதேசங்களில் இருந்தும் அழைத்து வந்து, அதனால் அவர்கள் வீண் சிரமங்களை எதிர்கொள்வது தற்போதைய நிலையில் பொருத்தம் இல்லை. 

அதனால் நாடு மற்றும் ஆதரவாளர்களை கருத்திற்காெண்டு வழமையான மேதின சம்பிரதாயங்களுக்கு மாற்றமாக இம்முறை மேதின கூட்டத்தை எளிமையான முறையில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனை வழங்கி இருந்தார்.

அதன் பிரகாரம் நாட்டின் தூரப்பிரதேசங்களில் இருந்து மிகவும் குறைவான ஆதரவாளர்களை அழைத்துந்திருந்தோம். மேதினத்தின் எமது நோக்கமாக இருந்தது, நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றிகொண்டு முன்னுக்கு செல்ல வேலைத்திட்டங்களை வெளிப்படுத்துவதாகும். அதன் பிரகாரம் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் முதலீட்டாளர்களை நாட்டுக்கு அழைத்துவர தேவையான 11பிரேரணைகளை சமர்ப்பித்திருந்தார்.

மேலும் நாட்டின் ஜனாதிபதியின் கட்சி என்றவகையில் எனைய கட்சிகளைப்போன்று எமக்கும் பேரிணிகளையும் வாகன கண்காட்சிகளையும் நடத்தி, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை கொழும்புக்கு அழைத்து வந்து எமது பலத்தை காட்ட முடியும். ஆனால் மக்கள் பலத்தையும் அரசியல் பலத்தையும் காட்டும் தறுணம் இதுவல்ல. 

மக்கள் மற்றும் அரசியல் பலத்தை காட்டவேண்டிய சந்தர்ப்பத்தில்  அதனை நாங்கள் உறுதிப்படுத்துவோம். பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு நாட்டின் ஜனாதிபதி பதவியை பெற்றுக்கொண்ட ஐக்கிய தேசிய கட்சிக்கு, மேதின கூட்டத்துக்கு மக்களை ஒன்றுசேர்ப்பது பெரிய விடயமல்ல என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »