Our Feeds


Thursday, May 4, 2023

Anonymous

இலங்கை மருத்துவ பீட மாணவர் பெலாரஸில் மர்மமான முறையில் மரணம்!

 



பெலாரஸில் உள்ள க்ரோட்னோ அரச மருத்துவ பல்கலைக்கழகத்தில், 24 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இலங்கை மாணவர் தனது பல்கலைக்கழக விடுதி அறையிலிருந்து கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

குறித்த மாணவன் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காததால், இலங்கையைச் சேர்ந்த சக மாணவர்கள், அவரது விடுதி அறைக்குச் சென்று பார்த்தபோது, அவர் உயிரிழந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் கழுத்தில் ஒரு துணி கட்டப்பட்டிருப்பதையும், அதன் மறுமுனை அறைக்குள் ஒரு அலமாரியில் கட்டப்பட்டிருப்பதையும் மாணவர்கள் அவதானித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கண்டியில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலையொன்றின் பழைய மாணவனும், பெலாரஸில் உள்ள க்ரோட்னோ அரச மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நான்காம் வருட மாணவனுமான திஷான் குலரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மரணத்திற்கு வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து பெலாரஸ் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »