ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது
பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.இளையோரின் பங்கேற்பு மற்றும் கல்வி மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கு பொதுநலவாய அமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி , டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக தொடர்பாடல்களை வலுப்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அவர் கானா ஜனாதிபதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதோடு, இந்த நிகழ்வுக்கு இணையாக நடைபெற்ற 'Fireside Chat' நிகழ்வில் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க கலந்துகொண்டார்.