Our Feeds


Wednesday, May 10, 2023

SHAHNI RAMEES

பாகிஸ்தான் முழுவதும் வன்முறை - ஒருவர் உயிரிழப்பு

 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் மீது ஊழல், பயங்கரவாதம், வன்முறை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றில் ஆஜராக வந்தார். 



இதற்கிடையே ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக இம்ரான்கான் நேற்று மதியம் இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு வந்தார். 



அப்போது அங்கு வந்த துணை இராணுவத்தினர் இம்ரான்கானை கைது செய்து நீதிமன்றில் இருந்து இழுத்து சென்றனர். 



அவரை வாகனத்தில் ஏற்றி ராவல் பிண்டியில் உள்ள ஊழல் தடுப்பு பொலிஸ் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். ஊழல் வழக்கு ஒன்றில் இம்ரான்கான் கைது செய்யப்பட்டதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



நீதிமன்றத்தில் இம்ரான் கான் இருந்த அறையில் ஜன்னல், கண்ணாடி கதவுகளை உடைத்த துணை இராணுவத்தினர் அவரை தாக்கி அழைத்துச் சென்றனர் என்று தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர். 



இம்ரான் கான் கைதை அடுத்து அவரது கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.



சாலைகளில் திரண்ட அவர்கள் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. பொலிஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. பல இடங்களில் பொலிஸாருக்கும், போராட்டகாரர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. பொலிஸார் மீது கற்கள் வீசப்பட்டன. பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இதனால் பாகிஸ்தான் முழுவதும் பதற்றம் நிலவி வருகின்றது. வன் முறையில் ஒருவர் பலியாகியுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »