சந்தையில் கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டை விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
1000 முதல் 1100 ரூபாய் வரை இருந்த கோழி இறைச்சியின் விலை திடீரென 1500 முதல் 1600 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் சந்தையில் மீன் விலையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பேலியகொட மீன் சந்தையில் பிரதான மீன் வகைகள் 1400 ரூபா முதல் 2700 ரூபாவுக்கும் இடையில் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை முட்டைக்கான விலையை அரசாங்கம் நிர்ணயம் செய்த போதிலும், இன்னும் 53 ரூபா தொடக்கம் 55 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையிலேயே முட்டை விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர்.