Our Feeds


Wednesday, May 10, 2023

News Editor

வட்ஸ்அப்பில் இந்த இலக்கங்களில் அழைப்பு வந்தால் எடுக்க வேண்டாம்


 வட்ஸ்அப் குறுஞ்செய்தி தளத்தைப் பயன்படுத்தும். '+84, +62, +60, +234' ( நாட்டின் தொலைபேசி இலக்கம் ) மற்றும் பல நாடுகளின் கோடில் இருந்து அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வருவதாக வட்ஸ்அப் பயனர்கள் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்துள்ளனர்.

 

கடந்த காலங்களில் இதற்கு முன்னதாக இதே போல மோசடிகளுக்கு வட்ஸ்அப் தளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த தளத்தின் மூலம் பயனர்களை தொடர்பு கொள்வது எளிது. இந்த நிலையில் மாதந்தோறும் சுமார் 2 பில்லியன் செயற்பாட்டு (Active accounts) பயனர்களை கொண்டுள்ள வட்ஸ்அப் தள பயனர்கள் மீண்டும் மோசடி அழைப்புகளை பெற்று வருகின்றனர்.

 

இப்போதைக்கு மலேசியா, வியாட்நம், நைஜீரியா, கென்யா, எத்தியோப்பியா போன்ற நாடுகளின் குறியீட்டிலிருந்து இந்த அழைப்புகள் வருவதாக தெரிகிறது. இது ஏன் வருகிறது என்பது தெரியவில்லை. சிலருக்கு வேலைவாயப்பு சார்ந்த செய்திகளும் வருகின்றன. அதனால் பயனர்கள் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.


தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை வட்ஸ்அப் பயனர்கள் தவிர்த்து விடலாம். அதே போல தெரியாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகள், அதில் இருக்கும் லிங்குகளை திறப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதில்  லிங்குகளை திரக்கும் போது பயனர் தகவல் மட்டுமல்லாது இணைய வழியில் பணத்தையும் களவு போகலாம்.

 

பயனர்கள் தங்களுக்கு தெரியாத அல்லது சந்தேகத்திற்கு இடம் கொடுக்கும் எண்களை தடை(Block) செய்து, வட்ஸ்அப்பில் முறைப்பாடு செய்யலாம் என வட்ஸ்அப் தளம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »