டயலொக் நிறுவனம் தனது நடவடிக்கைகளை ஏயார் டெல் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.
இதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் டயலொக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க, கொழும்பு பங்கு சந்தைக்கு அறிவித்துள்ளார்.
டயலொக் இலங்கையின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வழங்குநராகும். இந்த இணைப்பு ஏயார்டெல் லங்காவிற்கு ஒரு பெரிய பயனர் தளத்தை அணுக உதவும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.