Our Feeds


Thursday, May 11, 2023

Anonymous

தலைமன்னாரில் சிறுவர் கடத்தல் முயற்சி முறியடிப்பு - இரு சந்தேக நபர்கள் கைது!

 



மன்னார் தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமம் பகுதியில் வியாபார பொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்று சிறுவர்கள் இருவருக்கு இனிப்பு பொருட்களை வழங்கி கடத்த மேற்கொண்ட முயற்சி பொது மக்களின் உதவியுடன் முறியடிக்கப்பட்டுள்ளது.


இன்று மதியமளவில் வாகனத்தில் வியாபார பொருட்களை விற்பனை செய்ய வந்த வாகனம் ஒன்றில் இருந்த சாரதி அவ் வீதி வழியாக பயணித்த இரு சிறுமிகளுக்கு இனிப்பு பொருட்களை வழங்கியுள்ளார்.


இதனையடுத்து வாகனத்தில் கடத்த முற்பட்ட சமயம் இரு பிள்ளைகளும் தப்பி சென்று கிராமத்தவர்களுக்கு தெரிவித்த நிலையில் கிராம மக்கள் இணைந்து குறித்த வாகனத்தையும் வாகன சாரதி மற்றும் உதவியாளர்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.


குறித்த சிறுமிகள் தப்பியோடி ஒழிந்த நிலையில் அவர்களுக்கு பின்னால் வாகனத்தில் வந்தவர்கள் துரத்திக் கொண்டு வந்ததாகவும் வாகனத்தினுள் வெளிநாட்டு நபர் ஒருவர் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் தெரிவித்துள்ளார்


இந்த நிலையில் வாகனத்தை சோதித்த நிலையில் வெளிநாட்டவர் இருக்கவில்லை என்பதுடன் வாகனத்தில் இருந்த இரு சந்தேக நபர்களையும் பொது மக்கள் தலைமன்னார் பொலிஸிடம் ஒப்படைத்த நிலையில் தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


(மன்னார் நகர் நிருபர்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »