Our Feeds


Monday, May 1, 2023

News Editor

ஹொரவப்பொத்தான விபத்தில் இருவர் உயிரிழப்பு!


 கெப்பித்திகொல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஹொரவபொத்தான நோக்கி திரும்பிக்கொண்டிருந்த கார் ஒன்று, ஹொரவபொத்தானை – வவுனியா வீதியில் கிவுளேகட பகுதியில் நேற்றிரவு 9.50 மணியளவில் இரண்டு மாடுகளையும் அதன் பின்னர் கல்வெட்டு ஒன்றுடன் மோதியுள்ளதாக ஹொரவப்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.


இதன்போது காரில் பயணித்த மூவரில் ஒருவர் ஹொரவ்பொத்தான வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றைய இருவரும் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். 


இந்த விபத்தில் ஹொரவ்பொத்தான, மரதன்கடவல பகுதியை சேர்ந்த முனசிங்ககே ரோமின்த மதுபாசன (22 வயது) மற்றும் ஹொரவ்பொத்தான நிக்கவெவ சந்தியில் வசித்து வரும் ரன்னஹென்னகே சதறு பிரபாஷன (19 வயது) ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


இதேவேளை குறித்த விபத்தில் படுகாயமடைந்த 30 வயதுடைய நபர் அனுராதபுர போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவப்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


முஹம்மட் ஹாசில்



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »