Our Feeds


Thursday, May 18, 2023

Anonymous

பாஸ்போட் பற்றிய மற்றுமொரு முக்கிய அறிவிப்பு

 



வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கான விண்ணப்பத்தை ஒன்லைனில் பெற்று மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை  வீடுகளுக்கே அனுப்பி வைக்கும் புதிய முறை ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய இன்று (18) தெரிவித்தார்.


இதற்காக 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய 50 பிரதேச செயலக அலுவலகங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், கைரேகை பெறும் இயந்திரங்களை பொருத்தி உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பதாரர் அந்த பிரதேச செயலக அலுவலகத்திற்குச் சென்று கைரேகைகளை பதிவு செய்து ஒன்லைனில் அல்லது இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையிலும் பணத்தை செலுத்திய பின்னர் வீட்டிற்கு செல்ல முடியும் எனவும் இலுக்பிட்டிய தெரிவித்தார். 


இதன் பின்னர் மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை வீட்டுக்கே அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »