அடையாள வேலை நிறுத்தம் காரணமாக இன்று இயக்கப்படவிருந்த 5 அலுவலக ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (10) நள்ளிரவு வரை குறித்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
நானு ஓயாவில் இருந்து கண்டி மற்றும் கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படவிருந்த டிக்கிரி மெனிகே விரைவு ரயில் சேவை இன்று இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று அதிகாலை 3.55 மணிக்கு கணேவத்தையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் பாணந்துறை வரை இயக்கப்படவிருந்த அலுவலக ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.