கடுவெல நகரில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் விபசார விடுதிகளாகச் செயற்பட்ட 4 இடங்களில் சோதனை நடத்தி 12 பெண்கள் உட்பட 16 பேரைக் கைது செய்ததாக கடுவெல பொலிஸார் தெரிவித்தனர்.
கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளின் அடிப்படையில் கடுவெல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வீரசிங்கவின் பணிப்புரையின் பேரில் நீதிமன்றத்தில் பெறப்பட்ட அனுமதியின் பேரில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களில் 12 பெண்களும் முகாமையாளர்களாக பணியாற்றிய நான்கு ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் கிரிதிவெல, பலாங்கொட, ஹங் வெல்ல, பியகம, பொலன்னறுவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும் இவர்களில் திருமணமான பெண்களும் அடங்குவதாக பொலிஸார் கூறினர். சந்தேக நபர்கள் கடுவெல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர்.
