Our Feeds


Thursday, June 8, 2023

ShortNews

3 ஆயிரம் கிலோ ஹெரோயினை அழிக்க வழியில்லாமல் தவிக்கும் இலங்கை அரசு



கடந்த 3 வருடங்களில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 3 தொன் ஹெரோயின் நீதி மற்றும் இரசாயன பரிசோதனைத் திணைக்களத்தில் குவிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்புகளை 1000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் எரிக்க வேண்டும் என்றும், ஆனால் அதற்கான இடம் இல்லாத காரணத்தால் அவை கையிருப்பு சேகரிக்கப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தேசிய பாதுகாப்பு துறை கண்காணிப்பு குழுவில் தெரிவித்தார்.

இந்த ஹெராயின் கையிருப்புகளை ஆழ்கடலில் மூழ்கடிக்க முடியும் என்றும், ஆனால் அதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, 2020ம் ஆண்டு முதல் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கையிருப்பு இன்னமும் அப்படியே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »