Our Feeds


Tuesday, June 13, 2023

ShortNews Admin

மஹிந்த ராஜபக்ஷவின் ஆளுமை கோட்டாவிடம் இருந்திருந்தால் பொதுஜன பெரமுன அரசாங்கம் இன்றும் ஆட்சியில் இருந்திருக்கும். - ரோஹித



பொதுஜன பெரமுனவை புறக்கணித்து எதிர்காலத்தில்  எவராலும் அரசாங்கத்தை அமைக்க முடியாது .மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் ஆளுமை கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்திருந்தால் பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான அரசாங்கம் இன்றும் ஆட்சியில் இருந்திருக்கும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.


அளுத்கம பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) மாலை இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திய போதும் மக்களின் எதிர்பார்ப்பை எம்மால் நிறைவேற்ற முடியவில்லை.

நிறைவேற்றுத்துறையின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட முடியாது.அரச தலைவர்கள் எடுத்த ஒருசில தீர்மானங்களால் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்து பாரிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் ஆளுமை கோட்டபய ராஜபக்ஷவிற்கு இருந்திருந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் இன்றும் ஆட்சியில் இருந்திருக்கும்.பொருளாதார நெருக்கடி  பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்படுபவர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.இதன் காரணமாகவே பொதுஜன உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை புறக்கணித்து செயற்பட ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.பொதுஜன பெரமுன அரசியலில் எப்போதும்  இரண்டாம் நிலைக்குப் போகாது.

எமது ஆதரவு இல்லாமல் இனிவரும் காலங்களில் எவருக்கும் அரசாங்கத்தை அமைக்கவும் முடியாது என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »