கெப்பிதிகொல்கொல்லாவை நீதிவான் நீதிமன்றத்தின் சட்டத்தரணி ஒருவர் ஒரு குழுவினரால் தாக்கப்பட்ட நிலையில், பதவிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதவிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சட்டத்தரணி கெப்பிதிகொல்கொல்லாவை நீதிவான் நீதிமன்றிலிருந்து வெளியேறிச் சென்றிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பதவி - ஸ்ரீபுர கவுந்திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சட்டத்தரணி ஒருவரே இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளார்.
பதவிய பிரதேசம் ஒன்றின் நகரிலுள்ள வீதி ஊடாக நேற்று (12) மாலை சட்டத்தரணி சென்று கொண்டிருந்தபோது அந்த வழியை வெள்ளை வேன் ஒன்றினால் மறித்த மது போதையில் காணப்பட்ட இருவர் அவரை தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான சட்டத்தரணி மேலும் கூறுகையில், தன்னைத் தாக்கிய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அலிவங்குவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார்.
