பெலன்வத்தை அலுவலகத்திற்குச் சொந்தமான நீரேற்று நிலையத்தில் அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாளை (13) காலை 10.00 மணி முதல் நாளை (14) காலை 6.00 மணி வரை 20 மணித்தியாலங்களுக்கு பின்வரும் பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.
கோரகபிட்டிய, சித்தாமுல்ல, ஆரவல, ரத்மல்தெனிய, மஹரகம-பிலியந்தல வீதி, எதிரிசிங்க மாவத்தை, மொரகெட்டிய வீதி, மடவளை வீதி, பொகுந்தர வீதி மற்றும் அது தொடர்பான அனைத்து பக்க வீதிகளும் நாளை நீர் விநியோகம் தடைப்படும் என்பது குறிப்பிடதக்கது.
இதேவேளை அளுத்கம, மத்துகம, அகலவத்த ஒன்றிணைந்த நீர் வழங்கல் திட்டத்தில் அத்தியவசிய விஸ்தரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் எதிர்வரும் 14ஆம் திகதி (14.06.2023) புதன்கிழமை மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 9.30 மணி வரையிலான 12 மணிநேர நீர் விநியோகத்தடை பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
வாத்துவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, கட்டுக்குருந்தை, நாகொட, பயாகல, மக்கொனை, போம்புவல, அளுத்கம, தர்காநகர், பெந்தோட்டை, களுவாமோதர, மொரகல்ல, பிளம்னாவத்த ஆகிய பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும்.
