கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் நாளை (06) முன்னிலையாகுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்ற கூட்டத்தொடரில் நாளை (06) கலந்து கொள்ளவுள்ளதால் இது குறித்து சபாநாயகருக்கு அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே சபாநாயகரை தொடர்பு கொள்ள முயன்ற போதும், தொடர்பு கொள்ள முடியவில்லை இதனையடுத்து பிரதிசபாநாயகருக்கு இது குறித்து அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
