Our Feeds


Tuesday, June 20, 2023

ShortNews

SLPP, MP க்களை கொழும்பில் தங்குமாறு அறிவிப்பு - முக்கியமானவர்களுக்கு அமைச்சுப் பதவி?



எதிர்வரும் 28ம் திகதி முதல் எதிர்வரும் நீண்ட வார இறுதியில் கொழும்பில் தங்கியிருக்குமாறு ஆளும் கட்சியின் அனைத்து அமைச்சர்களுக்கும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அலுவலகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் நீண்ட வார இறுதியில் ஜனாதிபதி செயலகத்தினால் ஆளும் கட்சி அமைச்சர்களுக்கு அவசர அழைப்பு விடுக்கப்படலாம் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த வார இறுதியில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, சி.பி. ரத்நாயக்க, எஸ்.பி.திஸாநாயக்க, சரத் வீரசேகர, எஸ்.எம்.சந்திரசேன உள்ளிட்ட அமைச்சர்கள் பலருக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைச்சர்களின் பதவிகள் மாறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவரிடம் கேட்ட போது, ​​தனக்கும் இவ்வாறான செய்தி வந்துள்ளதாக தெரிவித்தார்.

ஆனால் அது தொடர்பில் மேலதிக தகவல்களை வழங்க முடியாது என அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »