Our Feeds


Tuesday, June 20, 2023

ShortNews

VIDEO: பெண்களை காதிகளாக நியமிப்பதற்கு உலமா சபை ஒப்புக்கொண்டது உண்மை - நடந்ததை போட்டுடைத்தார் மு.க தலைவர் ஹக்கீம்!




முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் பற்றி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடந்த இறுதி பேச்சுவார்த்தையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் சார்பில் கலந்து கொண்ட மௌலவி முர்ஷித் முளப்பர் அவர்கள் “பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கும் விவகாரத்தில் முஸ்லிம் நாடுகள் சில எடுத்துள்ள முடிவுகளை போல் நாமும் விட்டுக்கொடுத்து பெண்களை காதி நீதிபதிகளாக ஆக்க அனுமதிக்க முடியும் என்ற நெகிழ்வான நிலைக்கு வரமுடியும் என தெளிவாக கூறினார்.” என SHORTNEWS தளத்தின் SHORT TALK நிகழ்வில் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்தார்.


பெண் காழிகளை நியமிக்கும் விவகாரத்தில் எப்படி நெகிழ்வாக முடிவெடுப்பது என உலமா சபையின் உலமாக்களிடம் நான் கேட்ட போது, “காதிகளாக ஆண்கள் மட்டும் தான் இருக்க முடியும் என்ற வாத்தையை எடுத்து விடுவோம்”. என்றார்கள் அப்படி செய்தால் பெண்களும் காதிகளாக வருவதில் சிக்கல் வராது என்பதுதானே அதன் அர்த்தம். அந்த விஷயத்தில் மாத்திரம் ஒரு விட்டுக்கொடுப்புக்காக நாங்கள் உடன்படலாம் அதற்கு தயாராக இருக்கிறோம் என்று அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் பிரதிநிதி மௌலவி முர்ஷித் முளப்பர் தெளிவாக சொன்னார். என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்தார்.


ஹக்கீம் அவர்களின் வீடியோவை கீழே பார்க்கலாம்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »