தலவாக்கலையில் இருந்து மதகும்புரவத்தை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று துனுகெதெனிய, கிரிடிகெட்டிய பிரதேசத்தில் இன்று (09) வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற போது பஸ்ஸில் சுமார் 25 பேர் பயணித்துள்ளதுடன், படுகாயமடைந்தவர்களை கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தள்ளனர்.
வவஹேன பிரதேசத்தில் இருந்து வட்டகொட தோட்டத்தில் பணிபுரிய வந்தவர்களை ஏற்றிக்கொண்டு பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய குறித்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை வட்டகொடை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
