Our Feeds


Sunday, July 9, 2023

ShortNews

திருமண வீட்டுக்குச் செல்வதனை தாய் தடுத்ததால் தற்கொலை செய்த 13 வயதான மாணவி : அகலவத்தையில் சம்பவம்!



களுத்துறை அகலவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த மாணவி அளுத்கம, பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்தவராவார். 

கடந்த வெள்ளிக்கிழமை (07) தனது விடுதியிலிருந்து வீட்டுக்குச்  சென்றுள்ள இந்த மாணவி எதிர்வரும் நாளில் நடைபெறவுள்ள திருமண  நிகழ்வுக்கு தானும் வருவதாக அவரது தாயாரிடம் கூறியுள்ளார். 

இருப்பினும் மகள் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும், அன்றைய தினம் விடுதிக்கு சென்று பாடசாலைக்கு தயாராகும் படியும் தாய் மகளை எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், சம்பவ தினம் இரவு இந்த மாணவியைக் காணாத நிலையில் மாணவியின் வீட்டின் அருகிலுள்ளவர்கள் கழிவறை கதவை உடைத்து பார்த்த போது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் அகலவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »