அனுராதபுரம் - குருநாகல் வீதி அபண்பொல பிரதேசத்தில் இன்று (10) அதிகாலை இடம்பெற்ற மேலும் ஒரு கோர விபத்து 2 உயிரிழப்பு , மற்றும் 29 பேர் காயம்.
குரகல யாத்திரைக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த பஸ் வண்டி ஒன்றே விபத்துக்குள்ளாகி உள்ளது.
அனுராதபுரம் - குருநாகல் வீதியில் அம்பன்பொல பிரதேசத்தில் இன்று (10) அதிகாலை இந்த அனார்த்தம் இடம்பெற்றது.
வீதி ஒரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி ஒன்றின் பின் புறம் மோதியதில் பேருந்தில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 29 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 6 பெண்களும் ஒரு ஆண் உள்ளடக்கம்.
மேலும் 18 பெண்களும் நான்கு ஆண்களும் கல்கமுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலாவ பகுதியைச் சேர்ந்த 32 வயது மற்றும் 71 வயதுடைய இருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
